சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வதற்கான சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
* வெண்டைக்காய் – 1 /2 கிலோ
* பெரிய வெங்காயம் – 1
* தக்காளி – 2
* வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
* மல்லித்தூள் – 4 தேக்கரண்டி
* மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
* மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
* புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
* தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
* நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு
செய்முறை
1.கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்
genericcialisfast.com
சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
2.பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
3.பின்னர் புளிக்கரைசல் மற்றும் 11/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெண்டைக்காய் வேகும் வரை நன்கு வேக விடவும்.
4.கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment