Thursday, 1 September 2016

பன்னீர் பாயாசம் Recipe




பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயசம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)

பால் – இரண்டு கப்

கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்

குங்குமபூ – சிறிதளவு

சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)

முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்


செய்முறை
ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.

கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.

பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.


வெண்டைக்காய் புளிக்குழம்பு

சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வதற்கான சமையல் குறிப்பு.



தேவையான பொருட்கள்

* வெண்டைக்காய் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 4  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 3  மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1.கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்
genericcialisfast.com
சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 5  நிமிடங்கள் வரை வதக்கவும்.

2.பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 10  நிமிடங்கள் வதக்கவும்.

3.பின்னர் புளிக்கரைசல் மற்றும் 11/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெண்டைக்காய் வேகும் வரை நன்கு வேக விடவும்.

4.கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து 5  நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.