Wednesday, 24 August 2016

உருளைக்கிழங்கு போளி Recipe

ஒரு சுவையான உருளைக்கிழங்கு போலி.  ஒரு மாலை சிற்றுண்டியாக பரிமாறவும்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – எட்டு (வேகவைத்து, மசித்தது)

கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி

உளுத்தம் பருப்பு –ந ஒரு மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு – எட்டு

மைதா மாவு – இரண்டு கப்

பச்சை மிளகாய் – ஒன்று

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி


செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக போளி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பிறகு, ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி போளி சுட்டு எடுக்கவும்.



பன்னீர் பாயாசம் Recipe

பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயசம்.



தேவையான பொருட்கள்

பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)

பால் – இரண்டு கப்

கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்

குங்குமபூ – சிறிதளவு

சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)

முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்


செய்முறை
ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.

கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.

பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.



வரகரிசி உப்பு சீடை Recipe

விழாக்களின் போது செய்யப்படும் ஒரு பாரம்பரிய சிற்றுண்டி.


தேவையான பொருட்கள்

வரகரிசி மாவு (ரெடிமேட்) – இரண்டு கப் (சலித்து, இரண்டு நிமிடம் வறுத்தது))

உளுந்து மாவு _அரை கப் (உளுந்தை இரண்டு நிமிடம் வறுத்து மாவாக அரைத்து கொள்ளவும்

உப்பு – தேவைகேற்ப

வெண்ணெய் – அரை மேஜைக் கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை
ஒரு கிண்ணத்தில் வரகு அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு, வெண்ணெய் சேர்த்து கையால் கிளறவும்.

பின், தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின், எண்ணையில் போடும் போது வெடிக்காமல் இருக்க அதில் உசியால் ஒரு ஓட்டை போட்டு கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



கடாய் பன்னீர் Recipe

கடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும்.




தேவையான பொருட்கள்

எண்ணெய்  – இரண்டு தேகரண்டி

நெய்  – ஒரு தேகரண்டி

சீரகம்  – அரை ஸ்பூன்

தணியா  – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – மூன்று

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

சின்ன வெங்காயம் – மூன்று

இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – இரண்டு

சக்கரை – இரண்டு சிட்டிக்கை

மஞ்சள்தூள் – சிறிதளவு

பன்னீர் – ஒரு கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

அரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டு

உப்பு – தேவையான அளவு

கடாய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தணியா – இரண்டு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன்

கடாய் மசாலா செய்முறை

தணியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தணியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பன்னீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளறி நன்றாக வதக்கவும்.

பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

பத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்

பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

அசத்தலான கடாய் பன்னிர் ரெடி.


கம்பு கொழுக்கட்டை Recipe

ஒரு சுவையான, ஆரோக்கியமான மற்றும் செய்ய மிகவும் எளிமையான கொழுக்கட்டை .


தேவையான பொருட்கள்

கம்பு மாவு – ஒரு கப்

வெள்ளம் – முக்கால் கப்

முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்

தேங்காய் துண்டு – இரண்டு டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை


செய்முறை
ஒரு கிண்ணத்தில் வெள்ளம் போட்டு முழுகுற அளவு தண்ணீர் ஊற்றி கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

இன்னொரு கிண்ணத்தில் கம்பு மாவு, தேங்காய் துண்டு, முந்திரி துண்டு, தேவையான அளவு வெள்ளம் தண்ணீர்  கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து பதினைத்து நிமிடம் ஆவி கட்டி எடுத்து பரிமாறவும்.



கேரட் கூட்டு Recipe

ஒரு ருசியான மற்றும் சுவையான கேரட் கூட்டு. சூடான சாதம் உடன் பரிமாறவும்.



தேவையான பொருட்கள்

கேரட் – 25௦ கிராம்

துவரம் பருப்பு – 1௦௦ கிராம்

வெங்காயம் – 1௦௦ கிராம்

பச்சை மிளகாய் – 15 கிராம்

தக்காளி – 1௦௦ கிராம்

மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

உளுத்தம் பருப்பு – 1௦ கிராம்

தேங்காய் – அரை முடி


செய்முறை
கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பிறகு, குக்கரில் கேரட், துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூன்று விசில் வேகவிடவும்.

பின், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் திருவல் சேர்த்து பரிமாறவும்.


சீரக ரசம் Recipe




தேவையான பொருட்கள்

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

கறிவேப்பலை – சிறிதளவு

துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன்

புளி கரைச்சல் – (அரை எல்லுமிச்ச பழம் அளவு புளி) இரண்டு கப்

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவைகேரப்

தக்காளி துண்டு – நான்கு

தாளிக்க:

நெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

கறிவேப்பலை – சிறிதளவு


செய்முறை
அரைக்க: சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பலை, துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளி கரைச்சல், உப்பு, பெருங்காயம், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் கடைசியில் தக்காளி துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

ஒரு கடாயில் நெய், கடுகு, கறிவேப்பலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டவும்.

சுவையான சீரக ரசம் தயார்.



ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட்




தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்

வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ் – ஒரு கப்

சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

மஞ்சள் தூள் – சிறிதளவு

லெமன் ஜூஸ் – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேர்ப

கொத்தமல்லி – சிறிதளவு, அலங்கரிக்க


செய்முறை
ஒரு பௌலில்  ஸ்வீட் கார்ன், வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ், வெங்காயம், தக்காளி, சாட் மசாலா, மிளகு தூள், லெமன் ஜூஸ், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.

வெங்காய தாள் பொரியல் Recipe



தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

சின்ன வெங்காயம் – கால் கப்

வெங்காய தாள் – அரை கப்

தேங்காய் திருவல் – கால் கப்

கறிவேப்பலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப


செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப்க்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடகளுக்கு, பிறகு தேங்காய் திருவல், கறிவேப்பலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடகள் கழித்து ஏறகவும்.


ஒரு, எளிய, ருசியான மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி.



தேவையான பொருட்கள்

காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

பன்னீர் – அரை கப் (துருவியது)

கரிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்

கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப


செய்முறை
ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கரிவேபில்லை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


isine on Facebook