Wednesday, 1 February 2017

தெம்பிட்டு Recipe


தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – இரண்டு கப்

பாகு வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)

வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் பல் – சிறிதளவு (நெய்யில் வறுத்தது)

ஏலக்காய் தூள் – சிறிதளவு

நெய் – 1௦௦ கிராம்


செய்முறை
வெல்லத்தில் சிறிதளவு தண்ணிர் ஊற்றி கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், தேங்காய் பல், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

வெங்காயம் தக்காளி தொக்கு Recipe


தேவையான பொருட்கள்

வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)

தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – ஒரு தேகரண்டி

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

பூண்டு – ஆறு (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பில்லை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – கால் டீஸ்பூன்


செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.

பிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பில்லை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

பின், பெருங்காயம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

தொக்கு போல் வந்தவுடன் இறக்கி இட்லி, தோசை, நீர் தோசைவுடன் பரிமாறலாம்.

ஸ்பைசி டைமன்டு பிஸ்கேட் Recipe

தேவையான பொருட்கள்

கடலை மாவு – அரை கப்

மைதா மாவு – ஒரு கப்

பச்சரிசி மாவு – ஒரு கப்

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

ஓமம் – ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்ளு – எட்டு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், ஓமம், வெள்ளை எள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, திக்காக திரட்டி, டைமன்டு வடிவில் சின்ன சின்னதாக வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ராகி களி Recipe



தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப்

உப்பு – ஒரு சிட்டிகை

தண்ணீர் – ஒன்றரை கப்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு அரை டம்ளர் கொதித்த தண்ணிரை எடுத்துவைத்துகொள்ளவும்.

பின் கொதிக்கும் தண்ணீரில் ராகி மாவு கொட்டி மூன்றுநிமிடம் கழித்து கைவிடாமல் கிளறவும்.

எடுத்துவைத்த தண்ணீர் தேவையானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நன்றாக கிளறிய பின் ஐந்து நிமிடம் தட்டு போட்டு முடிவைகவும்.

இறக்கிய பின் தண்ணீர் தொட்டு உருண்டை செய்து கொள்ளவும்.

அதிகம் சுன்னாபு சத்து உள்ள டிஷ் தயார்.